பொள்ளாச்சியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பெண் விடுதலை கட்சி தலைவர் சபரிமாலா சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்!

கோவை: பொள்ளாச்சியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பெண் விடுதலை கட்சி தலைவர் சபரிமாலா சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.


கோவை: பொள்ளாச்சியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பெண் விடுதலை கட்சி தலைவர் சபரிமாலா சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

பொள்ளாச்சி தொகுதி சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகரும், பெண் விடுதலை கட்சி தலைவருமான சபரிமாலா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஆனால், வேட்புமனு பரிசீலனையில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று பொள்ளாச்சி திமுக தேர்தல் அலுவலகத்தில் சபரிமாலா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது சபரிமாலா அளித்த பேட்டியின்போது, தனது வேட்பு மனுவை அதிகாரிகள் திட்டமிட்டு நிராகரித்துள்ளதாகவும், இப்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியில் அராஜகம், அடக்குமுறையை ஒழிக்க வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறது. பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படாது.

எனவே, சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் வரதராஜனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதாகவும். பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள், தனி காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து மக்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...