திருப்பூர்: திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து தராததால் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக பொதுமக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், அணைமேடு ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சிறுபான்மையினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் 80 வருடங்களாக வசித்து வருவதாகவும் இதுவரை பட்டா கேட்டு விண்ணப்பித்தும் மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், தனிநபர் போலி ஆவணங்கள் மூலம் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவதாகவும் அதற்கு மாவட்ட நிர்வாகம் உடந்தையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டி, 2021 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.