கோவை: கோவையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட, 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டன.

கோவையில் தேர்தல் நெருங்குகின்ற சூழ்நிலையில் பறக்கும் படையினர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை உரிய ஆவணம் இன்றி கொண்டு வரக்கூடிய வாகனங்களில் இருந்து பறிமுதல் செய்து வருகின்றனர்
இந்த நிலையில், கோவை இடையர் வீதியில் நேற்று, தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படையினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஞானேந்திரன் என்பவர், தன் காரில் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,598 கிராம் தங்கம், 1,362 கிராம் வெள்ளி ஆகியவற்றை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை நகைக் கடைக்கு உரியவை என அவர் கூறினாலும், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து, தேர்தல் அதிகாரி உத்தரவுபடி தங்கம், வெள்ளி மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.
அதேபோல, சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் ரோடு பகுதியில் கோழிக்கூண்டுடன் வந்த மினி லாரியை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். லாரியில் வந்த சூலுார் கள்ளப்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இருந்த, 9.63 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், உப்பிலிபாளையம் ரோட்டில் வந்த சவுரிபாளையத்தை சேர்ந்த சிவா என்பவரிடம் இருந்து, 65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்தை, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க, தொகுதி தேர்தல் அதிகாரி ராம்குமார் உத்தரவிட்டார்.