கோவை: வால்பாறையில் வறட்சியின் காரணமாக வன விலங்குகள் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில மாதங்களாக கோடை மழை பெய்யவில்லை. இதன் காரணமாக வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதியில் உள்ள ஆறுகள் ஓடைகள் சிற்றாறுகள் அனைத்தும் வறண்டு விட்டன.

மேலும், வால்பாறை நகரை ஒட்டியுள்ள நடுமலை ஆறு கூழாங்கல் ஆற்றில் மட்டும் சிறிதளவு தண்ணீர் உள்ளன. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன.
இதன் காரணமாக மனித வன உயிரின மோதல்கள் ஏற்படும் அபாயம் உள்ளன. இதனால் வனத்துறையினர் வாகன ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும், வனவிலங்குகளை பார்க்கும் பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்கும்படியும், இரவு நேர நடமாட்டத்தை தவிர்க்கும் படியும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.