கோவை: ஏமாற்றுபவர்களை நம்பாமல் உங்களுக்காக பணியாற்ற வாய்ப்பு தாருங்கள் என்று அமமுக வேட்பாளர் செல்வா சிங்காநல்லூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பேருந்து நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் அமமுக வேட்பாளர் செல்வா இன்று காலை முதல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

பிரச்சாரத்தின் போது மக்களிடம் அவர் பேசுகையில், இந்த தொகுதியில் கடந்த பல ஆண்டுகளாக எம்எல்ஏவாக பதவி வகித்து வந்தவர்கள் மாறி மாறி மக்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

குறிப்பாக SIHS காலனி மேம்பாலப் பணி பல ஆண்டுகளாக முடங்கி கிடப்பது, தொகுதி முழுவதும் அடிப்படை வசதிகள் இல்லாமல் காட்சி அளிப்பது உள்ளிட்ட எண்ணற்ற பிரச்சனைகள் உள்ளன. இதற்கு முன் எம்எல்ஏவாக பணியாற்றியவர்கள் அவர்களின் வளர்ச்சிக்கு மட்டுமே அக்கறை காட்டியுள்ளனர். இந்த தொகுதி வளர்ச்சிக்கு அக்கறை காட்டவில்லை என்றார். மேலும், ஏமாற்றுபவர்களை நம்பாதீர்கள் உங்களுடன் பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று அவர் பேசினார்.
பின்னர், அம்மா பேரவை மாவட்ட செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சிங்கை சேது கூறியதாவது:
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மவுனப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த மவுன புரட்சி தேர்தலில் எதிரொலிக்கும். நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் ௭ங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர் என்றார்.