கோவை கணபதி பகுதியில் அம்மன் அர்ஜுனன் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு!

கோவை: கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் போட்டியிட கூடிய அம்மன் கே. அர்ஜுனன் கோவை கணபதி பகுதிகளில் உள்ள தெருக்களில் வீதி வீதியாகச் சென்று அரசின் திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார்.


கோவை: கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் போட்டியிட கூடிய அம்மன் கே. அர்ஜுனன் கோவை கணபதி பகுதிகளில் உள்ள தெருக்களில் வீதி வீதியாக சென்று அரசின் திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார்.

கோவை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இன்று காலை கட்சி நிர்வாகிகளுடன் கோவை கணபதி 3 நம்பர் பேருந்து நிலையம், கோபால்சாமி கோயில் வீதி, சங்கனூர் ரோடு, பெரிய கடை வீதி, மணியகாரம் பாளையம், அண்ணா நகர், வெங்கடேசபுரம், சி.எம்.எஸ் பின்புறம், கட்டபொம்மன் வீதி, ஆகிய பகுதிகளுக்கு வாக்கு கேட்டுச் சென்றார்.

அப்பொழுது அவருடன் அதிமுக கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் வாசலில் கோலமிட்டு உற்சாகத்தோடு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

வாக்கு சேகரிப்பின் போது அம்மன் அர்ஜுனன் பேசும்போது:-

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய ஆசிபெற்ற சின்னம் இரட்டை இலை. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அம்மாவின் கனவை நிறைவேற்றும் வகையில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் திருமணமாகிச் செல்லும் வரை பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து செயல்படுத்தி காட்டிக்கொண்டு உள்ளது என்றார்.

வருகிற தேர்தலில் பெண்களுக்கு வாசிங்மிசின் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொேரானா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தில் மக்களுடைய நலனை பாதுகாக்க அதிமுக அரசு என பல்வேறு நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார். அதிமுக மகளிர் அணியைச் சேர்ந்த லீலாவதி உண்ணி கமலா பிரைசராஜ், லக்கி சண்முகம் உட்பட பலர் இருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...