கோவையில் பதட்டமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுப்பு..! சிறப்பு கவனம் செலுத்த முடிவு!

கோவை: கோவை மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கணக்கிடப்பட்டுள்ள 861 சாவடிகளில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கணக்கிடப்பட்டுள்ள 861 சாவடிகளில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பதற்றம் மிகுந்தவை என 861 ஓட்டுச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள், கோவை மாவட்டத்தில் முழு வீச்சில் நடக்கின்றன. ஓட்டுச்சீட்டு அச்சிடும் பணியை அலுவலர்கள் தொடங்கியுள்ளனர். ஓட்டுச்சாவடிகளில் தேவையான வசதிகளை செய்யும் பணியும் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், மாவட்டத்தில் மொத்தம், 4427 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதற்றம் மிகுந்த ஓட்டுச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேட்டுப்பாளையத்தில் 17 இடங்களில் இருக்கும் 51 ஓட்டுச்சாவடிகள், சூலுாரில் 11 இடங்களில் 52 ஓட்டுச்சாவடிகள், கவுண்டம்பாளையத்தில் 26 இடங்களில் 153 ஓட்டுச்சாவடிகள், கோவை வடக்கில் 20 இடங்களில் 153 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

தொண்டாமுத்தூரில் 19 இடங்களில் 137 ஓட்டுச்சாவடி, கோவை தெற்கில் 17 இடங்களில் 125 ஓட்டுச்சாவடி, சிங்காநல்லூரில் 14 இடங்களில் உள்ள 91 ஓட்டுச்சாவடிகள், கிணத்துக்கடவில் 9 இடங்களில் 59 ஓட்டுச்சாவடி, பொள்ளாச்சியில் 6 இடங்களில் 28 ஓட்டுச்சாவடி, வால்பாறையில் 7 இடங்களில் 12 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

இந்த ஓட்டுச்சாவடிகளில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், கூடுதலாக அலுவலர்களை பணியமர்த்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...