கோவை: கோவையில் கணபதி முதல் சரவணம்பட்டி வரை போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மேம்பாலம் அமைக்கப்படும் என்று வ.ம. சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

கோவை வடக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சண்முகசுந்தரம் நேற்று இரவு கணபதி பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அப்போது அவர் பேசியதாவது:-
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழர்களின் எதிர்காலம் குறித்து தொலைநோக்கு பார்வையுடன் தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளார். நான் நகராட்சித் தலைவராக இருந்தபோது அந்த பகுதியில் ஏராளமான வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு உள்ளேன். என்னை இந்த பகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்தால் பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவேன் என்றார்.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கோவை கணபதி முதல் சரவணம்பட்டி வரை மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நலிவடைந்த சிறு குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்த சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன். அரசின் திட்டங்களை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.
எனவே, வாக்காளர் இந்த தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது திமுக நிர்வாகிகள் வடவள்ளி துறை, கணபதி ராஜ்குமார், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் மோகன் குமார் கணபதி சிவக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் குழு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.