கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு தொடையில் புற்றுநோய் கட்டியை அகற்றி சாதனை படைத்த மருத்துவர்களுக்கு டீன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில், இளம்பெண்ணின் தொடை எலும்பில் இருந்த புற்றுநோய் கட்டி, அதிநவீன சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
ஊட்டியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், வலது தொடையில் பெரிய கட்டியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில், தொடையில் எலும்பு முறிவு ஏற்படக்கூடிய வகையில், கட்டி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அறுவை சிகிச்சை வாயிலாக, கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
இதுகுறித்து, மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:
பெண்ணின் தொடையில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்ற வேண்டும் என்றால், தொடைக்கு கீழே காலை முழுவதும் அகற்ற வேண்டிய நிலை உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவ குழுவினர் ஆலோசனை செய்து, ஊனம் ஏற்படாத வகையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதற்காக, தசைகளை பலப்படுத்தும் இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுதவிர, தொடை எலும்பின் அச்சு அசலான மாதிரிகள் எடுக்கப்பட்டு, எலும்பு வடிவிலான உலோக மாதிரி, துல்லியமாக வடிவமைக்கப்பட்டது. பின்னர், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அதி நவீன ஊனமில்லா எலும்பு புற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, தொடையில் பாதிக்கப்பட்ட எலும்பு அகற்றப்பட்டு, உலோகம் பொருத்தப்பட்டுள்ளது,
தொடர்ந்து கால் தசைகளை பலப்படுத்தி, நடப்பதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை டாக்டர் சுரேஷ் வெங்கடாசலம், எலும்பியல் துறை டாக்டர் வெற்றிவேல் செழியன், மயக்கவியல் துறை டாக்டர் கல்யாண சுந்தரம் ஆகியோர் அடங்கிய குழுவினர், இந்த சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.