திமுக ஆட்சி அமைந்தவுடன் கோவையில் அடுக்குமாடி குறுந்தொழில் பேட்டை அமைக்கப்படும் - சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக்

கோவை: சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக் ஹோப்ஸ் கல்லூரி, சிங்காநல்லூர் சாலை, மணீஸ் திரையரங்கு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக் ஹோப்ஸ் கல்லூரி, சிங்காநல்லூர் சாலை, மணீஸ் திரையரங்கு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது அவர் பேசுகையில்;-

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் சிறு குறு தொழில் கூடங்கள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த தொழிற் கூடங்கள் வளர்ச்சிக்கு அதிமுக அரசு, கடந்த 10 ஆண்டுகளில் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக ஜிஎஸ்டி வரி உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வால் மிகவும் பாதிக்கப்பட்டு, தொழிற்கூடங்கள் மூடு விழா கண்டது.



குறிப்பாக, ஜாப் ஒர்க் எடுத்து பணிபுரிபவர்கள் 18 சதவீத வரி உயர்வால் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர தொழிற் கூடங்களுக்கு இந்த அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. சிறு குறு தொழிற்கூடங்களின் வளர்ச்சிக்கு, குறுந்தொழில் பேட்டை அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் நான் பேசினேன். அதிமுக அரசு அதை கண்டுகொள்ளவில்லை. இப்போது கூறுகின்றேன். என்னை வெற்றி பெற வைத்தால், திமுக ஆட்சி அமைந்தவுடன், அடுக்குமாடி குறுந்தொழில் பேட்டை அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.

மேலும், தொழிற்துறையினருக்கும், அரசிற்கும் ஒரு பாலமாக செயல்படுவேன் என கூறிய அவர், திமுக ஆட்சியில், பாதாள சாக்கடை திட்டம் 400 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. இந்த பணிகளை இவ்வளவு ஆண்டுகள் கடந்தும் அதிமுக அரசு முடிக்கவில்லை. இந்த மெத்தன போக்கோடு செயல்படும் இந்த அரசை அகற்ற வேண்டும் எனவும், திமுக ஆட்சி அமைந்தவுடன், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்படும். கொரோனா காலத்தில் வழங்க வேண்டும் என ஏற்கனவே கூறியதை போல, 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும், கோவை மாநகராட்சியில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திட்ட பணிகளை இணையத்தளத்தில் பதிவிடாமல் மறைக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்.பி. வேலுமணி 25 ஆயிரம் கோடி ரூபாய் மேல் ஊழல் செய்துள்ளார். இந்த இந்த கொள்ளை அடித்த பணத்தை கொண்டு வாக்காளர்களை விலைக்கு வாங்கி விடலாம் என நினைக்கின்றார். மக்கள் ஏமாந்தவர்கள் அல்ல, அதிமுகவினர் அனைவரும் தோற்கடிக்கப்படுவார்கள் என்று கூறினார். இதைத்தொடர்ந்து, வீடு வீடாக நடந்து சென்று துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் வழங்கி வாக்கு சேகரித்தார்.

இந்த பிரச்சாரத்தின்போது, பகுதி கழக செயலாளர் எஸ்எம்.சாமி, பகுதி கழக பொறுப்பாளர் நாகராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், சிபிஐ சுந்தரம், மதிமுக சூரி நந்தகோபால், கொமதேக தனபால், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...