கோவை: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் அவர்களை ஆதரித்து தி.மு.க வின் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய திருச்சி சிவா எம்.பி., அவர்கள்:-

தற்போதைய நிலையில் மத்திய அரசும், மாநில அரசும் நம்மை வஞ்சித்துக் கொண்டு இருக்கின்றன. உதாரணமாக பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, பேருந்து கட்டணம் மற்றும் பால்விலை உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் போன்றவை செயல்களால் மக்களை வஞ்சித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மேலும், உங்களுக்கு கிடைத்திருக்கும் வேட்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் அவர்கள் என்றும் மக்களோடு மக்களாக - உங்களில் ஒருவராக இருப்பவர் எந்நாளும் உங்களுக்காக உழைத்து சிறப்பாக பணியாற்றக் கூடியவர். கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை தொகுதி முழுவதும் வழங்கியவர். இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை ஆதரிப்பதோடு, மக்களுக்கு ஒரு விடிவுகாலத்தை ஏற்படுத்த நமது உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பையா (எ) ஆர்.கிருஷ்ணன் அவர்களை மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து வேட்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் அவர்கள் கவுண்டம்பாளையம் பகுதியின் 9வது மற்றும் 5வது வார்டுகளுக்கு உட்பட்ட பிரபு நகர், அண்ணா நகர், பியூன்ஸ் காலனி, சேரன் நகர், பாலன் நகர், எஸ்.பி.நகர் ஆகிய பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது, பல இடங்களில் பட்டா பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, சாலை மற்றும் சாக்கடை வசதிகள் வேண்டுமென அப்பகுதி பெண்கள் கோரிக்கை வைத்தனர். இவைகள் அனைத்தையும் கழக ஆட்சி அமைந்து, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உடன் உடனடியாக செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.

இப்பிரச்சாரத்தின் போது கவுண்டம்பாளையம் பகுதியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜவஹர் மற்றும் சரத் விக்னேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் 5வது வார்டு அசோக் நகர் கீழ் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரஹீம், அமிதாப் கண்ணன் ஆகியோருடன் அப்பகுதி ஆண்கள் - பெண்கள் - இளைஞர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் தி.மு.கழக வேட்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் தி.மு.க வில் இணைந்தனர்.

இதில் சி.பி.எம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட பொதுச் செயலாளர் பரமசிவம், கொ.ம.தே.க வின் மாவட்ட செயலாளர் பிரேம், மாவட்ட தலைவர் சுபாஷ், ம.தி.மு.க வின் தொகுதி பொறுப்பாளர் தங்கவேலு மற்றும் தி.மு.க வின் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கே.எம்.சுந்தரம், ஆர்.சி.தியாகராஜன், ஜவஹர், பகுதி பொறுப்பாளர் கா.மதியழகன், பொறுப்பாளர் நாகராஜ், வட்ட கழகச் செயலாளர்கள் தன்ராஜ், நாகா முரளி பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி சசி பாபு மற்றும் அரசூர் பூபதி, சிங்கை ரவிச்சந்திரன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் டாக்டர் கணேஷ், சண்முகம், மைகேல், மாலதி மற்றும் ம.தி.மு.க சம்பத், சி.பி.எம் துரைசாமி, பெருமாள், கொ.ம.தே.க பிரகாஷ், ஆனந்த், கொங்கு சீனி, ராதாகிருஷ்ணன், சி.பி.ஐ கார்த்திக், ஜீவா, காங்கிரஸ் மகேஷ், வடிவேல், சாந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புக்கள் திரளாக கலந்து கொண்டனர்.