அழிவின் அபாயத்தில் சிறுகுறு தொழில்கள்: உடனடியாக தலையிட மத்திய தொழில்துறை அமைச்சருக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி. கடிதம்!

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள சிறுகுறு தொழில்கள் பேராபத்தை சந்தித்து வருகிறது. லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை அளித்துவரும் இந்த தொழிற்கூடங்களை அழிவின் அபாயத்தில் இருந்து பாதுகாத்திட உடனடியாக மத்திய அரசு தலையிட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.



கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள சிறுகுறு தொழில்கள் பேராபத்தை சந்தித்து வருகிறது.

லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை அளித்துவரும் இந்த தொழிற்கூடங்களை அழிவின் அபாயத்தில் இருந்து பாதுகாத்திட உடனடியாக மத்திய அரசு தலையிட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் தொழில் முனைவோருடனான கலந்துரையாடல் கடந்த வாரம் நடைபெற்றது. எனது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்றார். தொழில்முனைவோர் முன்வைத்த ஆலோசனைகளைத் தொகுத்து மத்திய தொழில்துறை அமைச்சர் நிதின் ஜெயராம் கட்கரிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளேன்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இரண்டாவது பெரிய நகரமாகும். இது ஜவுளி இயந்திரங்கள், மோட்டார், பம்ப், பிளாஸ்டிக், வெட்கிரைண்டர் உள்ளிட்ட தொழிற்கூடங்கள் அதிகம் உள்ள பகுதியாகும். ஆயிரக்கணக்கான இந்த தொழிற்கூடங்கள் மேற்கண்ட தொழிலுக்கான உதிரி பாகங்களை தயாரித்து கொடுத்து வருகிறது. இதுபோக ஜாப் வேலை செய்யும் தொழிற்கூடங்களும் உள்ளன. இந்த சிறுகுறு தொழிற்கூடங்களில் நேரிடையாக ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், மறைமுகமாக லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

சமீபகாலமாக இந்த தொழிற்கூடங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. இது குறித்து தொழில்முனைவோருடன் நடத்திய கலந்துரையாடல் மேற்கொண்டபோது இத்தொழில் அழிந்து போகாமல் எப்படி காப்பாற்றுவது என்கிற ஆலோசனையை அவர்கள் முன்வைத்துள்ளனர். தொழில்முனைவோர் முன்வைத்த ஆலோசனைகளை உங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறேன். இதில் தாங்கள் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மூலப்பொருட்களின் விலை  நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு முன்பும், அதற்கு பின்னும் மூலப்பொருட்களின் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக அமினோ கேஸ் விலை மட்டும் 166 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இப்படி தொடர்ந்து மூலப்பொருட்களின் விலை மிகக் குறைந்த காலத்திற்குள் கடுமையாக அதிகரித்து வருவதால் தொழிற்கூடம் நடத்தும் தொழில்முனைவோர் குறைந்தபட்ச லாபம்கூட ஈட்டமுடியாத நிலை உள்ளது.

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலை உருவாகும். ஆகவே மூலப்பொருட்களின் விலை உயர்வை கொரோன தொற்று காலத்திற்கு முன் என்ன விலை நிர்ணயிக்கப்பட்டிருந்ததோ அந்த விலைக்குள் கொண்டு வரவேண்டும். மத்திய அரசு மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த, கண்காணிப்பு குழுவை உருவாக்க வேண்டும். மூலப்பொருட்களின் விலை சுமார் ஓராண்டு காலத்திற்கு ஒரே விலை இருக்கும் நிலையை உறுதிப்படுத்த வேண்டும்.

சிறுகுறு தொழில்களுக்கு 12 முதல் 18 சதவீதம் வரை ஜி.எஸ்.டி. வரி நிர்ணயிக்கப்படுகிறது. இது மிகமிக அதிகமாகும். இதனால் பெரிய அளவிற்கு தொழில்கள் பாதித்து வருகின்றனர். ஆகவே ஐந்து சதவீதத்திற்குள் ஜி.எஸ்.டி. வரியை நிர்ணயிக்க வேண்டும். ஜி.எஸ்.டி குளறுபடிகளைத் தீர்க்க  தீர்வாய குழுவை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

சிறுகுறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பம்ப், மோட்டர், கிரைண்டர் போன்றவை வெளிநாடுகளில் நாளுக்குநாள் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இந்த தொழில்நுட்பத்தை உடனுக்குடன் உள்வாங்கிக்கொண்டு உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். ஆனால் அத்தகைய நிலை இங்கு இல்லை. இதனால் வெளிநாட்டு தயாரிப்பு பொருட்களுக்கு ஈடு கொடுக்கும் நிலையில் நாம் இல்லை என்பது கவலையளிக்கும் விசயமாகும். எனவே, புதிய தொழிற்நுட்பத்தை கற்றுக்கொள்ளும் வகையில் இதற்காக பயிற்சி மையத்தை கோவையில் அமைக்க வேண்டும்.

சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கடன்கள் வங்கிகளில் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடன்களை கொடுக்கிறது என்றாலும், பெரும்பாலான வங்கிகள் சிறுகுறு தொழில்களுக்கான கடன்களை பெருவதில் பெரும் சிரமம் உள்ளது. ஆகவே சிறுகுறு தொழில்களுக்காக மட்டுமே தனியாக வங்கிகள் உருவாக்கப்பட வேண்டும்.

இந்த கொரோனா காலத்தில் சிறுகுறு தொழில்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதால் கடன் தவனை செலுத்தும் காலத்தை 15 ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும். கடனுக்கான வட்டியை 8 சதவீதமாக குறைக்க வேண்டும். இதில் இரண்டு சதவீதத்தை அரசு மானியமாக வழங்க வேண்டும். இதேபோன்று ஜாப் ஆர்டர்கள் பெற்று பணிகளை முடித்து வழங்கியவுடன் 15 நாட்களுக்குள் இதற்கான தொகையை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

சிறுகுறு தொழிற்சாலை உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திட ஒரு சிறப்பு சந்தை மையத்தை உருவாக்க வேண்டும். தொழிற்பேட்டை உருவாக்க வேண்டும். தொழிற்பேட்டை அருகிலேயே தொழிலாளர்கள் தங்குவதற்கு ஏதுவாக வீட்டு வசதி அல்லது விடுதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும். சிறுகுறு தொழில்களுக்கான பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். இந்த தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் அளிக்க வேண்டும் அல்லது ஆயிரம் யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.மேற்கண்ட இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித்தரும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...