தி.மு.க. தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு; இதுதான் செல்லும்: திருப்பூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!

திருப்பூர்: திருப்பூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு;அதுதான் செல்லும் என்று கூறினார்.


திருப்பூர்: திருப்பூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு; அதுதான் செல்லும் என்று கூறினார்.



திருப்பூரில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் விஜயகுமார், திருப்பூர் தெற்கு தொகுதி குணசேகரன், காங்கேயம் சட்டமன்ற தொகுதி ராமலிங்கம் மற்றும் பல்லடம் தொகுதி எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகிய 4 வேட்பாளர்களுக்கு ஆதரவாக திருப்பூர் யூனியன் மில் ரோடு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-



எஃகு கோட்டையாக அ.தி.மு.க.வை மாற்றியவர் ஜெயலலிதா. ஒவ்வொரு திட்டத்தையும் அடித்தட்டு மக்களுக்காக உருவாக்கியவர் ஜெயலலிதா. 2023-ஆம் ஆண்டுக்குள் வீடு இல்லாத அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும். இலவச இருசக்கர வாகனம் தந்ததால் பெண் வண்டி ஓட்டிச்செல்ல ஆண் உட்கார்ந்து கொண்டு செல்கிறார். தந்தை பெரியார் கண்ட கனவான ஆணுக்குப் பெண் சமம் என்பதை , இலவச இருசக்கர வாகனம் வழங்கியதன் மூலம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 45 ஆயிரம் கோடியாக இருந்த தொழிற்சாலைகள், தற்போது 6 லட்சத்து 85 ஆயிரம் கோடிகளுக்கு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் தேர்தல் அறிக்கை கொடுத்துள்ளோம். தி.மு.க. தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு போன்றது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு; அதுதான் செல்லும்.



தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். சட்டம் ஒழுங்கு எங்கும் கெடவில்லை. சிறுபான்மையின மக்களுக்கு அ.தி.மு.க. உறுதுணையாக உள்ளது. அனைத்து கோயில்களுக்கும் நாங்கள் போவோம். தி.மு.க. எதிர்க்கட்சியாக உள்ளது. நாம் ஆளும்கட்சி. நாம் அனைவரிடமும் அன்பாக பழகி வருகிறோம். நாம் பிரியாணி, பரோட்டா சாப்பிட்டால் காசு கொடுக்கிறோம். ஆனால் தி.மு.க.வினர் சென்றால் அமளிகாடுதான். ஆளும்கட்சியாக இருந்தபோது தி.மு.க.வினர் நடத்திய நில அபகரிப்பை அடக்கியது ஜெயலலிதா தான். மின்சாரம் என்றதுமே ஆற்காடு வீராச்சாமி தான் நியாபகத்திற்கு வரும். மின் தட்டுப்பாட்டினைச் சமாளிக்க முடியாமல் திணறினார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...