கோவை: நான் வெற்றி பெற்றால் சாக்கடை தூர் வாருதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்வேன் என்று கோவை தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் உறுதியளித்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 82-வது வார்டில் சாக்கடை தூர்வாருதல், புதிய சோலார் மின் விளக்குகள் அமைப்பது, குற்றங்களைத் தடுக்க பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவது, முக்கிய இடங்களில் இலவச இணைய வசதி, அரசு பள்ளிகளில் கழிப்பிட வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாக்கு சேகரித்தார்.
இதையடுத்து எஸ்.பி.என். லே அவுட் பகுதி மக்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்து பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து தான் வெற்றி பெற்றால், குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதாக வாக்குறுதியளித்தார்.