தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க.கோவை, பாலக்காடு எல்லை பகுதிகளில் தீவிர சோதனை..!

கோவை: தமிழகம் மற்றும் கேரளாவில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், கோவை, பாலக்காடு, திருச்சூர் எல்லை பகுதிகளில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.


கோவை: தமிழகம் மற்றும் கேரளாவில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், கோவை, பாலக்காடு, திருச்சூர் எல்லை பகுதிகளில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

கேரள மாநிலத்தின் எல்லையோரத்தில் உள்ள கோவை மாவட்டத்தின் சோதனை சாவடிகளான, வாளையார், முள்ளி, மேல்பாவியூர், வேலந்தபாளையம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம், மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, ஆனைகட்டி ஆகிய ஒன்பது சோதனை சாவடிகளில் சோதனைகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பரிசுப்பொருட்கள் பரிமாற்றம், பணம் மற்றும் மதுபானம் உள்ளிட்டவற்றினை எடுத்து செல்வதை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 90 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டு ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப்பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர் மாவட்ட எல்லை பகுதிகளில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

பிரதான சோதனை சாவடிகள் மட்டும் அல்லாது, பல்வேறு வழிகளில் எல்லையினை கடக்கும் வழிகளையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை, வருவாய்துறை, வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...