கோவை: மக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் வேலை கேட்டு வந்திருக்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று தொண்டாமுத்தூர் சுயேச்சை வேட்பாளர் மன்சூர் அலிகான் பிரசாரம் செய்தார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் செல்வபுரம் பேருந்து நிலையம் அருகேதென்னந்தோப்பு சின்னத்துக்கு வாக்களிக்கக்கோரி இளநீர் வெட்டி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இதையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான் பேசியதாவது:-
எனக்கு தொண்டாமுத்தூர் தொகுதியில் வீடு கொடுக்கமறுக்கிறார்கள், அலுவலகம் திறப்பதற்கும் பிரச்சினை செய்கிறார்கள். பிரச்சார வாகனத்துக்கு அதிகாரிகள் உரிய அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
பண முதலைகள், கார்ப்பரேட் நிறுவனத்துக்கு கைகூலிகளாக இருப்பவர்களையே தேர்ந்தெடுக்கிறீர்கள், எளிமையான வேலைக்காரனான எனக்கு வாய்ப்பளியுங்கள். நான் இந்த தொகுதியில் வேட்பாளராக இருப்பதால் தொகுதியில் பெருமளவு பணம் புழங்குகிறது. மக்களுக்கு 5,000 முதல் 10,000 வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மக்களிடம் கொள்ளையடித்த பணத்தைத்தான் அப்படி கொடுக்கிறார்கள்.
நான் வெற்றி பெற்றால் 10 லட்சம் தென்னை, பனை மற்றும் பலா மரங்களை மூன்று வருடங்களுக்குள் வளர்ப்பேன். 100 ரூபாய் இல்லாத சாதாரண மக்களின் வாக்கை சுரண்டுவதற்காக கார்ப்பரேட்களின் தரகர் மோடி தாராபுரம் வருகிறார். பா.ஜ.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாது. மாற்றத்திற்கான முதல் வித்தாக நான் இருப்பேன்.
மக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் வேலை கேட்டு வந்திருக்கிறேன். எனவே எனக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள். இயற்கை விவசாயத்தைக் காக்கவும், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. போன்ற கார்ப்பரேட்டுகளை ஒழித்து நல்லாட்சி அமைவதுதான் எனது லட்சியம். நான் தலைக்கவசம் அணியாமல் ஏன் பிரச்சாரம் செய்கிறேன் என்றால் இரு சக்கர வாகனத்தை எடுத்து இரண்டு நாட்கள்தான் ஆகின்றன. நான் வேகமாகச் செல்ல மாட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.