கோவை: கோவை வடவள்ளி பகுதியில் நிலவி வந்த கடுமையான குடிநீர் பிரச்சினையைத் தீர்த்த அரசு அ.தி.மு.க. அரசு என்று கூறி துண்டுபிரசுரங்கள் வழங்கி கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் வாக்கு சேகரித்தார்.

கோவை வடக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்கள் குறித்தும் இதுவரை செய்த பணிகளை பொதுமக்களுக்கு விளக்கியும் வடவள்ளி பகுதி முழுவதும் அம்மன் அர்ஜுனன் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது இந்தத் தொகுதியில் உறுதி செய்யப்பட்ட பல திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம். வடவள்ளி, வீர கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலவிய கடும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க 108 கோடி ரூபாய் செலவில் கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் தற்போது குடிநீர் பற்றாக்குறை தீர்ந்துள்ளது. எனவே நாங்கள் நிறைவேற்றப்படும் திட்டங்களை சொல்லித்தான் வாக்குகள் கேட்போம்.
இதேபோல் கிராமங்கள்தோறும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள், ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 2,500, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம், 11 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து மருத்துவத்தில் புரட்சி செய்தது, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றுவது என்பது உள்பட பல்வேறு திட்டங்களை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதேபோல வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,500, ஆறு இலவச கேஸ் சிலிண்டர்கள் உள்பட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் அறிவித்துள்ளார். அவை அனைத்தும் தேர்தலில் வெற்றி பெற்றதும் நிறைவேற்றப்படும். எனவே நிறைவேற்றக்கூடிய திட்டங்களை அளிக்கும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது பகுதி செயலாளர் கருப்பையா, வார்டு செயலாளர் சண்முகம், மாவட்ட பொருளாளர் பார்த்திபன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அமீது, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் லீலாவதி உண்ணி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்கள், மாவட்ட மாணவரணி செயலாளர் மணிகண்டன் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.