கோவை: கோவை மலுமச்சம்பட்டியில் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர், அமைச்சர் வேலுமணி, கோவை தெற்கு பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் உட்பட அதிமுக வேட்பாளகளை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று பரப்புரை மேற்கொண்டார்.
கோவை: தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், சூலூர், கோவை தெற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று ஈச்சனாரி எல்&டி பைபாஸ் சாலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அதிமுக வேட்பாளர்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், செ. தாமோதரன்,அமுல் கந்தசாமி, சூலூர்கந்தசாமி, ஜெயராமன் மற்றும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
"திமுக ஏழைகளை நிலத்தை அடித்து பிடுங்கினார்கள். ஸ்டாலின் சொல்வதெல்லாம் பொய். 2006 ல் திமுக சொன்னதை செய்யவில்லை. கடந்த தேர்தலில் ஸ்டாலின் நடந்து பார்த்தார், ஓடிப்பார்த்தார், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. திமுக, பல பொய்களை சொல்லி பார்க்கிறார்கள். அவர் டீ குடிச்சாரம், நாம டீக்கடையே நடத்தியிருக்கிறோம்", என்று சாடினார்.
அவர் பேசுகையில், எம்.ஜி.ஆரை யாராலும் வெல்ல முடியாத முதல்வராக அவர் தமிழகத்தை ஆண்டுள்ளார். இந்த இயக்கத்தை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக மாற்றி, 16 ஆண்டுகள் முதல்வராக ஜெயலலிதா தமிழகத்தை ஆண்டுள்ளார், என்றார்.
மேலும், பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமல்படுத்தினார் எனவும் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் உணவு பாதுகாப்பை உறுதி செய்தார், சமூக பாதுகாப்பு திட்டம் கொண்டுவந்து பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர், ஜெயலலிதா. கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை ரூபாய் 18 ஆயிரமாக உயர்த்தபட்டுள்ளது. வீட்டு வேலையை எளிதாக்க, மிக்சி கிரைண்டர் வழங்கப்பட்டது. பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கி, இன்று அண்ணன்களை பின்னால் அமரவைத்து, பெண்கள் வண்டியில் செல்கின்றனர்", என்றார்.
2006 முதல் 2011 இருந்த திமுக ஆட்சியில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூபாய் 45 ஆயிரம் கோடி. ஆனால், கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் ஆறு லட்சம் கோடிக்கு அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
மின்சார பற்றாக்குறை தீர்த்த ஆட்சி அதிமுக, விவசாய பெருங்குடி மக்களின் விதைகள் கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன..
6 பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யபட்டுள்ளது, இதுபோல அதிமுக ஆட்சி சாதனைகள் பல என்று பட்டியலிட்டார்.
தமிழகத்தில் ஜாதி, மதச்சண்டை இல்லை.சிறுபான்மையினருக்கு எங்காவது அச்சுறுத்தல் உள்ளதா? இல்லை. அவர்களை பாதுகாப்பத்தில் அம்மாவின் அரசு சிறப்பாக செயல்படுகிறது.சர்வ மதங்களையும் மதிக்கின்ற பண்பாடை அம்மா சொல்லி கொடுத்துள்ளார். நாங்கள் சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம், என்றார்.
ஜல்லிக்கட்டு நடைபெற பாரதப்பிரதமர் மோடி அவர்கள் தான் உதவினார். ரூபாய் 1200 கோடி ரூபாய் ஏய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் தமிழகத்தில் திறக்கப்படும். மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதிலும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காப்பதும், தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. நல்லவரக்ள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் சூழல் உருவாக்கியிருக்கிறது.
பத்தாண்டுகாலம் நல்லாட்சி கொடுத்த நம் அரசை தொடர நல்ல தீர்ப்பை நல்குங்கள், என்று மக்களிடம் வேண்டி கேட்டுக்கொண்டார்.