கோவை: கோவை வடக்கு தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் வ.ம.சண்முகசுந்தரம் கணபதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் பெண்கள் என அனைவரும் உற்சாக வரவேற்பு கொடுத்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
கோவை: கோவை வடக்கு தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் வ.ம.சண்முகசுந்தரம் கணபதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் பெண்கள் என அனைவரும் உற்சாக வரவேற்பு கொடுத்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அவருக்கு ஆதரவு கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்ட கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் பேசுகையில்: கோவை மக்கள் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் என்னை தேர்வு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி உள்ளீர்கள். கோவையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் உடனுக்குடன் பாராளுமன்றத்தில்ன்எடுத்துப் பேசி வருகிறேன்.என்னோடு இணைந்து திமுக எம்.பி.க்கள் அனைவரும் தொடர்ந்து தமிழர்களுடைய நலனுக்காக குரல் கொடுத்து வருகிறோம்.
இதேபோல, வரக்கூடிய தேர்தலில் சண்முக சுந்தரத்தை வெற்றி பெறச்செய்து சட்டமன்றத்திற்கு நீங்கள் அனுப்ப வேண்டும். அப்பொழுது நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உங்கள் குறைகளை நிறைவேற்றி தருவோம், என கூறினார்.
பின்னர், பேசிய திமுக வேட்பாளர், வ ம சண்முகசுந்தரம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையும் மேம்பட வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தேர்தல் அறிக்கையை தயாரித்து உள்ளார்.
அவர் அறிக்கையில் கூறியுள்ளபடி திமுக ஆட்சி அமைந்தவுடன் கொரோனா நிவாரண குடும்ப அட்டைகளுக்கு ரூபாய் 4000, ஆவின் பால் லிட்டருக்கு ரூபாய் 3 குறைப்பு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம், பழைய ஓய்வூதிய திட்டம், விவசாயத்துக்கு தனி பட்ஜெட், மகளிர் பேறுகால உதவி தொகையாக ரூபாய் 24 ஆயிரம், பேறுகால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும்.
இதுபோல், இன்னும் எத்தனையோ திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற உதயசூரியன் சின்னத்தில் ஆதரியுங்கள், இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பகுதி பொறுப்பாளர்கள் கோவை அஞ்சுகம், பழனியப்பன், முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், தேர்தல் பணிக்குழு தலைவர் குப்புசாமி, பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நந்தகுமார்,சுப்பிரமணியம் முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் வீரகோபால், மாநில மகளிர் அணி தொண்டர் அணி அமைப்பாளர்கள் மீனா லோகு, வட்டச்செயலாளர் சாந்தி உட்பட பலர் மற்றும் கூட்டணிக் ஆட்சியினர் வாக்கு சேகரித்தனர்.