பொள்ளாச்சி: காவல்துறை ஆய்வாளரால் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுவில் அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஆதரவான பதிவுகள் செய்யப்பட்டு வருவதாக பொள்ளாச்சி தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க.வினர் புகார் மனு கொடுத்தனர்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் அரசுத்துறையில் பணியாற்றும் அலுவலர்கள் பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் வெற்றிவேல் கொரோனா காலத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி அதில் தகவல்களை பரிமாறிக் கொண்டு வந்தார்.

இந்நிலையில் காவல் ஆய்வாளரால் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுவில் தற்போது அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஆதரவாக பல பதிவுகள் செய்யப்பட்டு வருவதாக தி.மு.க.வினர் பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறி நெகமம் காவல்துறை ஆய்வாளர் உருவாக்கிய அந்த வாட்ஸ் அப் குழுவில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஆதரவாக தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படுவதால் காவல்துறை ஆய்வாளர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க.வினர் வலியுறுத்தி உள்ளனர்.