கோவை: கோவையில் தேர்தல் தேதி நெருங்க நெருங்க, போஸ்டர் ஓட்டுவதில் தொடங்கி வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவது வரை ஆங்காங்கே அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே மோதல் மற்றும் தேர்தல் விதி மீறல் குறித்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
கோவை: கோவையில் தேர்தல் தேதி நெருங்க நெருங்க, போஸ்டர் ஓட்டுவதில் தொடங்கி வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவது வரை ஆங்காங்கே அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே மோதல் மற்றும் தேர்தல் விதி மீறல் குறித்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
தொடர்ந்து, திமுகவினர் மாவட்ட கலெக்டர் ராசாமணியிடம் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகள் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் மனு அளித்தனர். இதேபோல, அதிமுகவினரும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர். அந்த புகார் மனு மாவட்ட ஆட்சியர் மூலமாக தேர்தல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ராசாமணி (மாவட்ட தேர்தல் அதிகாரி) அவருடைய ஆய்வுக்குப் பிறகு அதிகாரி மாற்றம் செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்ட, மாநகராட்சி உதவி கமிஷனர் ரவி மாற்றப்பட்டார்.
இதனிடையே, கோவை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக, மத்திய மண்டல உதவி கமிஷனர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, தெற்கு மண்டல உதவி கமிஷனர், மேற்கு மண்டல உதவி கமிஷனர்களை நியமித்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதில், மத்திய மண்டல உதவி கமிஷனராக இருந்த மகேஷ் கனகராஜின் உண்மையான தகுதி, நிர்வாக அலுவலர். அவர், உதவி கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். சப்-கலெக்டர் அந்தஸ்திலான அதிகாரியே, தேர்தல் அலுவலராக பணிபுரிய வேண்டும் என்பதால், அவரை, வடக்கு மண்டலத்துக்கு மாற்றி விட்டு, மேற்கு மண்டல உதவி கமிஷனர் சிவசுப்ரமணியன், மத்திய மண்டலத்துக்கு மாற்றப்பட்டார். மேற்கு மண்டலத்துக்கு, தெற்கு மண்டல உதவி கமிஷனர் ரவி நியமிக்கப்பட்டார்.
இவருக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர், ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட வாய்ப்பிருப்பதால், வேறு அதிகாரியை நியமிக்க வேண்டுமென, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் ராஜாமணியிடம், தி.மு.க.,வினர் புகார் கூறினர். அம்மனு, தேர்தல் ஆணைய உயரதிகாரிகள் கவனத்துக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே, அதிகாரியை மாற்றச் சொல்லி, உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, உதவி கமிஷனர் ரவி, பிரதான அலுவலக கணக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
கணக்குப்பிரிவு உதவி கமிஷனர் சுந்தர்ராஜன், மேற்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டார். இவர், தெற்கு தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும் செயல்படுவார். உதவி தேர்தல் அலுவலராக ரவி செயல்பட்டபோது, செய்த பணிகள் அனைத்தும், தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு இருக்கின்றனவா..? என, மீண்டும் சரி பார்க்க வேண்டுமென்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, இது போன்ற மாற்றம் செய்யக் கூடியது இயல்பு தான். ஒருவருடைய புகாரின் அடிப்படையில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, என தெரிவித்தனர்.