வால்பாறையில் கட்டட பணிக்காக கலவை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

வால்பாறையில் கட்டட பணிக்காக கலவை ஏற்றிவந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் தார் ரோடு சீரமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வழக்கமாக கீழ்ப்பகுதியில் இருந்து லாரிகளின் மூலம் எம்சான்ட் என்ற மணல் போன்ற கலவை கொண்டு வரப்படுகிறது. அதேபோல, இன்று எம்சான்ட் கலவை பொள்ளாச்சிமிலிருந்து வால்பாறைக்கு டிப்பர் லாரியில் கொண்டுவந்த போது, வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் என்ற பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி கலவையோடு சாலையோரத்தில் கவிழ்ந்தது.



இதில் ஓட்டுனர் ரவிச்சந்திரன் வயது 49 என்பவர், சிறுகாயங்களுடன்அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருக்கு, வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த விபத்து பற்றி வால்பாறை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...