பூங்கா இடத்தை மீட்டு தருபவர்களுக்கு தான் எங்கள் ஓட்டு - கிணத்துக்கடவு தொகுதி மக்கள் பிளக்ஸ் வைத்து அதிரடி..!

பூங்கா இடத்தை மீட்டு தருபவர்களுக்கு தான் எங்கள் ஓட்டு - கிணத்துக்கடவு தொகுதி மக்கள் பிளக்ஸ் வைத்து அதிரடி..!


 35 வருடமாக பயன்படுத்தி வந்த பூங்கா இடத்தை மீட்டு கொடுப்போம் என்று உறுதி அளிக்கும் அரசியல் கட்சி வேட்பாளருக்கு தான் வாக்கு அளிக்கப் போவதாக, போத்தனூர் அருகே பொது அறிவிப்பு பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட போத்தனூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சத்திய சாய் நகர், சத்திய நாராயண நகர், பாத்திமா உம்மர் அவென்யூ குடியிருப்பு பகுதியில் சிறுவர் பூங்கா மற்றும் முதியோர், இளைஞர் நடைப்பயிற்சி தளமாக கடந்த 35 வருடமாக அப்பகுதி பொது மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் பூங்கா அமைந்துள்ள இடத்தில் தற்போது கழிவு நீர் உந்து நிலையம் அமைத்து வருகின்றனர். 

எனவே, மக்கள் பயன்படுத்தி வந்த பூங்கா இடத்தை மீட்க கடந்த மூன்று வருடமாக அரசிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இதனால், ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களில், பூங்கா இடத்தை மீட்டு கொடுப்பேன் என்று உறுதி அளிப்பவர்களுக்கு தான் எங்கள் வாக்கு என கூறி பெரிய பிளக்ஸ் வைத்துள்ளனர், அப்பகுதி பொது மக்கள்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...