திமுக வேட்பாளர் மீது அவதூறு பரப்புவதாக கூறி அ.இ.அ.தி.மு.க கவுண்டம்பாளையம் வேட்பாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் மீது தகுதியிழப்பு நடவடிக்கை எடுக்க கோரி திமுக வழக்கறிஞர்கள் அணியினர் மாவட்ட ஆட்சிரிடம் இன்று மனு கொடுத்தனர்.
திமுக வேட்பாளர் மீது அவதூறு பரப்புவதாக கூறி அ.இ.அ.தி.மு.க கவுண்டம்பாளையம் வேட்பாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் மீது தகுதியிழப்பு நடவடிக்கை எடுக்க கோரி திமுக வழக்கறிஞர்கள் அணியினர் மாவட்ட ஆட்சிரிடம் இன்று மனு கொடுத்தனர்.
கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன் மீது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பி. ஆர்.ஜி. அருண்குமார் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சமூக வலைதளங்களில் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்.
சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பான பொய்க் குற்றச்சாட்டுகளை வைத்து கவுண்டம்பாளையம் திமுக வேட்பாளர் பையா ஆர். கிருஷ்ணன் மற்றும் திமுகவின் தலைவர் ஸ்டாலினை விமர்சனம் செய்து வருகிறார். இந்தப் பதிவுகள் பையா ஆர்.கிருஷ்ணன் அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்கள் பார்வையில் தரக்குறைவான பிம்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக, குற்றம் சாட்டினர்.
எனவே, அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் பி.ஆர்.ஜி அருண்குமாரின் இத்தகைய செயல்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் வெளியிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.