கோவை: கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வ.ம.சண்முகசுந்தரம் இன்று காலை பி.என்.புதூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை: கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வ.ம.சண்முகசுந்தரம் இன்று காலை பி.என்.புதூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
எடப்பாடி ஒரு திறமையற்ற முதல்வராக உள்ளார். தமிழகத்தை 5 லட்சம் கோடி கடனில் விட்டு சென்றுள்ளார். அவருடைய தவறுக்கெல்லாம் பாஜக ஆட்சி முட்டுக்கொடுத்து காப்பாத்தி வருகின்றது. இதற்கெல்லாம், தமிழக மக்கள் நல்ல தீர்ப்பை, வரும் 6 ஆம் தேதி வழங்க உள்ளனர். 234 தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெற்று, தலைவர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளார், என்று வாக்காளர்கள் மத்தியில் பேசினார்.
சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இத்தொகுதி மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றி தரப்படும் என்றும் பரிசுகளை கொடுத்து வாக்குகளை பெற்றுக்கொள்ளலாம், என அதிமுகவினர் கனவு காண்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது, என்று கூறினார்.
தொடர்ந்து, சீரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பின்போது, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் துரைசாமி, மகளிரணி சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.