கோவை: மக்களுக்கு விரோதமாகவும், இந்திய நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிராகவும் இருக்கும் பாஜக ஆட்சிக்கு பல்லாக்கு தூக்கும் கட்சியாக அதிமுக இருக்கிறது என்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், திருச்சி சிவா எம்.பி சாடினார்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் நேற்று இரவு நடைபெற்றது.

கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முகமது யாசின் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்துகொண்டு பேசியபோது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி காலத்தில் செய்த நன்மைகளை எண்ணிப்பார்த்து மீண்டும் ஆட்சி அமைத்து மக்களுக்கு நல்லது செய்வோம் என்ற அடிப்படையில் வாக்கு கேட்கிறோம், என்றார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள திட்டங்கள் ஆட்சி அதிகாரம் இருக்கும் போது ஏன் அதிமுக செய்யவில்லை என்றும்
அதிமுக தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர் இலவசம் என்று சொல்லும் அதிமுக ஆட்சியில் இருக்கும்போது, ஏன் கேஸ் விலை குறைக்கவில்லை? எந்த சலுகையும் வழங்காதவர்கள், தேர்தல் நேரத்தில் இலவசத் திட்டங்கள் அறிவித்திருப்பது யாரும் நம்ப மாட்டார்கள், என்றும் தெரிவித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில், கிணத்துக்கடவு நகர பொறுப்பாளர் கனகராஜ், தலைமை கழக பேச்சாளர் தமிழ்பித்தன், மகளிர் அணி மாவட்ட துணைச் செயலாளர் சக்தி சரண்யா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.