தி.மு.க. வெற்றிபெற்றாலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது: கோவை தெற்கு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட ராதாரவி பேச்சு!

கோவை: தி.மு.க. வெற்றிபெற்றாலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று கோவை தெற்கு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட ராதாரவி கூறியுள்ளார்.


கோவை: தி.மு.க. வெற்றிபெற்றாலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று கோவை தெற்கு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட ராதாரவி கூறியுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நடிகர் ராதாரவி, பின்னர் கோவை டவுன் ஹாலை அடுத்த கெம்பட்டி காலனி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

67 ஆண்டு காலமாக திராவிடத்தை யோசித்துக் கொண்டிருந்த நான் தற்போது எனது 68-வது வயதில் தேசியத்தை சுவாசிக்க வந்துள்ளேன். மோடி, அமித்ஷா போன்ற வலிமையான தலைவர்களை வேறு எந்தக் கட்சியிலும் பார்க்க முடியாது, எதையும் துணிந்து செய்யக் கூடிய தலைவர்கள் அவர்கள்.



கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் அவர்களின் வாக்கு வங்கியை பிரிக்கவே மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இங்கு போட்டியிடுகிறார். கமல்ஹாசனுக்கு துணிவிருந்தால் அவரது சொந்த ஊரான பரமக்குடியிலேயே போட்டியிடுவாரா?

தேர்தலை முன்னிட்டு தான் மக்களுடன் சகஜமாக இருப்பதாக காட்டிக் கொள்ளும் கமல்ஹாசன் உண்மையில் தனது உடல்நலக் குறைவால்தான் சாலையோரத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார். வானதி சீனிவாசன் ஒருவர் வெற்றி பெற்றாலே அது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிதான், நடிகர் கமல்ஹாசனை பார்க்க மக்கள் கூட்டம் வரலாம்.ஆனால் யாரும் ஓட்டுப் போட மாட்டார்கள். எனவே கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெறப்போவதுவானதி சீனிவாசன் தான்.

கமல் தன்னை எம்.ஜி.ஆராக நினைத்து கொண்டிருக்கலாம் ஆனால் ஒருபோதும் அவர் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. கமல்ஹாசன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பி டீமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார், கம்யூனிஸ்ட் கட்சியினர் தி.மு.கவிடம் பணம் பெற்றுக்கொண்டு கூட்டணியில் இருக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே செத்துவிட்டது இனிவரும் காலங்களில் அப்படி ஒரு கட்சி இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் போகப்போகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கொண்டு வந்த திட்டங்களை தான் கொண்டு வந்ததாக கூறிக்கொள்ளும் ஸ்டாலின் நேர்மையற்றவர், சுயமாக சிந்தித்து பேச முடியாமல் காகிதத்தில் எழுதி வைத்துப் பார்த்து பேசுபவர் தான் ஸ்டாலின்.

வரும் சட்டமன்ற தேர்தலில் குறைந்த பட்சம் 140 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும், ஒருவேளை தி.மு.க. வெற்றிபெற்றாலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது, முதல்வர் ஆவதற்கான வாய்ப்பு அவருக்கு என்றும் அமையாது, எடப்பாடி பழனிச்சாமி தான் மீண்டும் முதலமைச்சராகப் போகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...