வால்பாறை: வால்பாறையில், அ.ம.மு.க.,தே.மு.தி.க. கூட்டணி வேட்பாளர் முருகராஜ் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழக கூட்டணியின் வேட்பாளராக கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகராஜ் என்பவர் போட்டியிடுகிறார்.

இதையடுத்து வால்பாறை பகுதிக்கு வருகை தந்த முருகராஜ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கோவை தெற்கு மாவட்டம் செயலாளர் சுகுமார், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கோவை மாவட்டச் செயலாளர் தினகரன், வால்பாறை நகர செயலாளர் நெல்லை செல்வம், பொதுக்குழு உறுப்பினர் குஞ்சலி, அம்மா பேரவை துணைச் செயலாளர் பாபுஜி மற்றும் ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக வால்பாறை பகுதியில் உள்ள கக்கன் காலனி, அண்ணாநகர், எம்.ஜி.ஆர்.நகர், வாழைத்தோட்டம் மற்றும் வால்பாறை காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் சென்று பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். வால்பாறை பகுதியில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து தருகிறோம் என்றும் வாக்குறுதி கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.