கோவை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இணையாக ஒப்பிட தகுதியற்றவர் எடப்பாடி பழனிசாமி என்று உதகை தேர்தல் பிரசாரத்தில் ஆ.ராசா எம்.பி. பேச்சு கூறினார்.

உதகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர். கணேஷை ஆதரித்து உதகை காப்பி ஹவுஸ் பகுதியில் தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இடையே தான் போட்டி என்றால். நடிகர் கமலஹாசன் தலைமையிலான 3-வது அணி பா.ஜ.க., அ.தி.மு.க.வின் மற்றொரு அணி. அந்த அணி தி.மு.க.வையும் மதச்சார்பற்ற கூட்டணியையும் வீழ்த்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இணையாக எடப்பாடி பழனிச்சாமியை ஒப்பிட்டு கூறுகிறார்கள். ஆனால் அதற்கு தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி. திடீர் முதல்வராக ஆனவர் எடப்பாடி பழனிசாமி. அவர் எப்படி முதல்வர் ஆனார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.