கோவை: கோவையில் வங்கிப் பணத்துக்கு பாதுகாப்புக்கு வந்த செக்யூரிட்டியிடம் இரவல் துப்பாக்கி இருந்தது. இதையடுத்து அவரையும் துப்பாக்கி உரிமையாளரையும் போலீசார் கைது செய்தனர்.

கோவையில் இன்று மதியம் திருச்சிதெற்கு வட்டாட்சியர் தேர்தல் அதிகாரி புனிதவதி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த சாலையில் வந்த வேன் ஒன்றை மறித்து சோதனை செய்தபோது, வங்கி ஒன்றுக்கு ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதுகுறித்து விசாரித்தனர்.
இதைத்தொடர்ந்து பாதுகாப்புக்காக வந்த செக்யூரிட்டி சுப்பிரமணியன் (வயது 55) என்பவர் கொண்டுவந்த துப்பாக்கி குறித்து விசாரித்தனர். அப்போது அவர், அது என்னுடைய துப்பாக்கி அல்ல, நண்பரிடம் இரவலாக வாங்கி வந்தது என்று கூறினார். இது படைக்கல சட்டப்பிரிவின் கீழ் தவறான செயல் என்பதால். துப்பாக்கியை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து சுப்பிரமணியனையும் ஆஜர்படுத்தினர்.
இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்து துப்பாக்கியின் உரிமையாளர் நாகலிங்கத்தை வரவழைத்து விசாரணை செய்தனர். அவர்கள் இருவர் மீதும் படைக்கல தடுப்புப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.