சிங்காநல்லூர் சுயேட்சை வேட்பாளர் மணிராஜுக்கு "ஸ்பேனர்" சின்னம் ஒதுக்கீடு..!
கோவை: வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக பம்ப்செட் தொழில் அமைப்பை சேர்ந்த மணிராஜ் என்பவர் போட்டியிடுகிறார்.
சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்று சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வேட்பாளர் மணிராஜுக்கு "ஸ்பேனர்" சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில் "நான் சார்ந்து இருக்கக்கூடிய இன்ஜினியரிங் தொழில் துறையை சேர்ந்த ஒரு உபகரணம் எனக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
தினமும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது." என்றார்.