கோவையில் கொரோனா பரவல்: என்.ஜி.ஜி.ஒ காலனி, பிரஸ்காலனி, வடமதுரை உள்ளிட்ட 18 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!

கோவையில் கொரோனா பரவல்: என்.ஜி.ஜி.ஒ காலனி, பிரஸ்காலனி, வடமதுரை உள்ளிட்ட 18 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதித்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் 18 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது, என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தினமும், 100க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 75 சதவீதம் பேர் உள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே வீதியில், 3 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அந்த வீதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

அந்த பகுதிகளில் தூய்மை பணியாளர்களை கொண்டு பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சம்மந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கோவை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 11 பகுதியும், மாநகராட்சி பகுதிகளில் 7 பகுதியும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகள் உள்ள இடங்கள் -- காரமடை, செட்டிப்பாளையம், சூலீஸ்வரான்பட்டி, கன்னம்பாளையம், நீலாம்பூர், சோமனூர், கல்லாம்பாளையம், ஜோதிபுரம், என்.ஜி.ஜி.ஒ காலனி, பிரஸ்காலனி, வடமதுரை, வங்கிகாலனி, கொளத்தேரி சாலை, ரங்கநாதபுரம் 2 வது வீதி, ஐஸ்வர்யா அவென்யூ, திருவாசம் வீதி, விநியாக கார்டன், விஸ்நாதபுரம் ஆகும். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்டவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். முககவசம், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுவது போன்றவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்,‘‘ என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...