கொரோனா பரவல்: தேர்தல் பிரச்சாரத்துக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
கோவை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் தேர்தல் பிரச்சாரத்துக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது, என மனு தாக்கல் செய்தார்
இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்தல் நடைமுறைகள், ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதில் தலையிட முடியாது எனவும் பிரச்சாரங்களுக்குத் தடை விதிக்க முடியாது என்று,தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்ளும் அனைவரும் முககவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும், என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.