கோவை: கோவையில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுத தடுப்பு பிரிவில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கேரளா, திருச்சூர், காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில், வெடிபொருள் மற்றும் ஆயுத தடுப்பு பிரிவின் கீழ் அதேபகுதியை சேர்ந்த தர்ஷன் குமார்(30), ராஜேஷ் (29) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களை, கேரளா போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகே இருப்பதாக, கேரளா போலீசார், கோவை ரயில்வே போலீசாரிடம் தெரிவித்தனர். இதன்பேரில், கோவை ரயில்வே போலீசார் நேற்று மதியம் சோதனையிட்டு, ரயில்வே ஸ்டேஷன் கார் பார்க்கிங் பகுதியில் நின்றிருந்த இருவரையும் பிடித்து, கேரளா போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
கேரளா போலீஸ் டி.எஸ்.பி., ராஜேஷ் தலைமையிலான போலீசார், நேற்று மாலை கோவை விரைந்து, இருவரையும் கேரளா அழைத்து சென்றனர். மேலும் ரயில்வே போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.