துப்பாக்கிகளை ஆன்லைனில் வாங்கியதாக வழிப்பறி கொள்ளையர்கள் வாக்குமூலம்..! போலீசார் அதிர்ச்சி

கோவை: கோவையில் வழிப்பறி சம்பவங்களில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், 'ஏர் பிஸ்டல்'களை, ஆன்லைன் மூலம் வாங்கியதாகத் தெரியவந்ததால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.


கோவை: கோவையில் வழிப்பறி சம்பவங்களில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், 'ஏர் பிஸ்டல்'களை, ஆன்லைன் மூலம் வாங்கியதாகத் தெரியவந்ததால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவையில், சில நாட்களுக்கு முன், பீளமேடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கூலி தொழிலாளியிடம் துப்பாக்கி காட்டி மிரட்டி, பணம் பறித்த வழக்கில், சென்னையை சேர்ந்த ரவுடி ரவி, (33) உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 4.55 எம்.எம்., ஏர் பிஸ்டல், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல், கருமத்தம்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, வழிப்பறி செய்வதற்காக, ஏர் பிஸ்டலுடன் சுற்றித்திரிந்த இருவரை கைது செய்தனர்; மேலும், மூவரைத் தேடி வருகின்றனர்.

இதுபோன்று, கடந்த சில நாட்களாக வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் ஏர் பிஸ்டல் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில், 'வழிப்பறி வழக்கில் கைதானவர்களிடம், 'ஏர் பிஸ்டல்' குறித்து கேட்டபோது, 'ஆன்லைன்' மூலம் வாங்கியதாகக் கூறுகின்றனர். இது, பெரிய பிரச்சினை. இதன் உண்மை தன்மையை விசாரிக்கிறோம். ஆன்லைன் மூலம், ஏர் பிஸ்டல் வாங்கப்பட்டது உண்மையாக இருப்பின், அது போன்ற விற்பனையை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...