கோவை: கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதே எனது முதல் கடமை என திமுக வேட்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் மக்களிடம் வாக்குறுதியளித்தார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணனை ஆதரித்து எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கீரணத்தம் புதுப்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார்.
அப்போது பி.ஆர்.நடராஜன் எம்பி பேசுகையில், தமிழகத்தில் தளபதி தலைமையில் அமைய இருக்கிற திமுக அரசாங்கத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளிலும் நமது அணியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று தளபதியின் பக்கத்தில் அமர வைப்பதற்கு கோவை மக்கள் தயாராகி வருகின்றனர்.
அந்த வகையில் நமது பையா (எ) கிருஷ்ணனுக்கு உதய சூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா பெருந்தொற்று உலகையே முடக்கிப்போட்டது. அந்த நேரத்தில் எந்தவித எதிர்பார்ப்பும், நோக்கமும் இல்லாமல் வீடுவீடாக நிவாரண பொருட்களை கொண்டு போய் சேர்த்தியவர் நமது பைய கிருஷ்ணன் அவர்கள். இப்போதுவரை எளிய மக்களின் குடும்பத்திற்கு கல்வி உதவி தொகை உள்ளிட்ட அர்ப்பணிப்பு மிக்க சேவையை செய்து வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகையில் இந்த சட்டமன்ற தொகுதியில் நாற்பதாயிரம் வாக்குகள் அதிகம் அளித்து என்னை வெற்றிபெற வைத்தீர்கள். அதேபோல பையா கிருஷ்ணனுக்கு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அளித்து மகத்தான வெற்றியை பெற்றுத்தர வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பையா கிருஷ்ணன் பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து பேசுகையில்,
தமிழகத்தை காப்பற்ற வேண்டும் தமிழ்நாட்டிற்கு நல்ல ஆட்சி தரவேண்டும் என்றால் ஒரே தலைவர் தளபதிதான். ஆகவே நீங்கள் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து தளபதியை முதல்வராக்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நமது தொகுதியில் தண்ணீர் பற்றாக்குறை என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. உங்கள் வாக்குகளின் மூலம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் முதலில் நான் கையில் முதல் நடவடிக்கை இந்த தண்ணீர் பிரச்சனையை தீர்த்துவைப்பதுதான் என்றார்.

கடந்த காலத்தில் காளப்பட்டி பேரூராட்சியில் 20 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் இருந்து வந்தது. நான் அந்த பேரூராட்சிக்கு தலைவராக நான் போட்டியிடுகையில் அப்பகுதி மக்களிடம் மூன்று மாதத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்த்துவைப்பேன் என்கிற வாக்குறுதியை அளித்தேன். அதேபோன்று காளப்பட்டி பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இரண்டே மாதத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்த்துவைத்தேன். ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தங்குதடையின்றி காளப்பட்டி பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் என்பது கிடைத்து வருகிறது.
இதேபோல, நமது கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் என்பதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றேன்.
முன்னதாக திமுக வேட்பாளர் பையா கிருஷ்ணன் கீரணத்தம் புதுப்பளையத்தில் வாக்கு சேகரிப்பு பிரச்சார பயண துவக்க நிகழ்வில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வழி நெடுக பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு தங்களது ஆதரவை மனப்பூர்வமாக வெளிப்படுத்தினர்.
வாக்காளர் சந்திப்பு பிரச்சார நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் ஆர்.கோபால், திமுக ஒன்றிய செயலாளர் சுரேஷ், கீரணத்தம் திமுக ஊராட்சி தலைவர் பா.தோ.ராசு, திமுக ஊராட்சி செயலாளர் கருப்புசாமி, மதிமுக பாலகுருசாமி, பகுதிகழக செயலாளர் விசுவராஜ், காங்கிரஸ் வட்டார செயலாளர் நாகராஜ், கொமதேக மேற்கு மாவட்ட செயலாளர் குழந்தைவேலு, ஒன்றிய செயலாளர் சுதாகர் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சார பயணத்தில் உரையாற்றினர்.