வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கட்சி வேட்பாளராக அமுல் கந்தசாமி போட்டியிடுகிறார். இன்று காலை முதல் புது மார்க்கெட் நகரின் மத்திய பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கட்சி வேட்பாளராக அமுல் கந்தசாமி போட்டியிடுகிறார்.

இன்று காலை முதல் புது மார்க்கெட் நகரின் மத்திய பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து, வாட்டர் பால், கருமலை பச்சை மலை தேயிலை தோட்டங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
சமீபத்தில், கருமலை தேயிலை தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் மற்றும் வாகன பிரச்சாரத்தின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும், என வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த வாக்கு சேகரிப்பில் வேட்பாளர் அமுல் கந்தசாமி உடன் நகர அதிமுக செயலாளர் மயில் கணேசன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.