வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காகவே மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் - பி.ஆர் நடராஜன்

கோவை: தமிழகத்தில் அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காகவே மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பி.ஆர் நடராஜன் எம்பி தெரிவித்தார்.

கோவை: தமிழகத்தில் அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காகவே மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பி.ஆர் நடராஜன் எம்பி தெரிவித்தார்.

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக்கை ஆதரித்து பி.ஆர். நடராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல் விலையை தினமும் உயர்த்தி வருகிறது. இதேபோல, காஸ் சிலிண்டர் விலை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் அறிவிப்பு காரணமாக கடந்த பத்து நாட்களாக விலை உயர்வை மோடி அரசு அறிவிக்கவில்லை. இல்லையென்றால் பெட்ரோல் விலை 100ஐ கடந்தும், கேஸ் சிலிண்டர் விலை ஆயிரத்தை கடந்தும் சென்றிருக்கும்.

வேலை இல்லை, வருவாய் இல்லை, சம்பள உயர்வு இல்லை என்கிற நிலையில் இந்த விலை உயர்வு என்பது ஏழை, எளிய, நடுத்தர என அனைத்து தரப்பு மக்களையும் பெரும் சித்தரவதைக்கு உள்ளாக்கியுள்ளது. இவர்களுக்கு தைரியம் இருந்தால் இந்த விலைவாசி உயர்வை நியாயப்படுத்தி வாக்குகளை கேட்டுப்பாருங்கள் என்றார். 

கடந்த பத்தாண்டு கால அதிமுக அரசை அப்புறப்படுத்த, பாஜக என்கிற தீய சக்தியை பாடம் புகட்ட இந்த தேர்தலை கவனத்தோடு உழைப்பாளி மக்கள் பயன்படுத்த வேண்டும். சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்கிற கலைஞரின் எண்ணத்திற்கு செயல்வடிவம் தரும் தளபதியின் ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என்கிற இந்த இருபெரும் காரணங்களுக்காகவே அதிமுக அரசை அப்புறப்படுத்த வேண்டும். அத்தகைய பணியை உழைப்பாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...