கோவை: தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தமிழகக் கோயில்களுக்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று மீது இந்து முன்னணி கூறியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இந்து முன்னணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்துகொண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து பேசினார். இதைத்தொடர்ந்து காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோயில்களை ஆன்மிகவாதிகள் மற்றும் மடாதிபதிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூறிய கருத்துக்கு தி.மு.க.ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொள்கை இல்லாமல் சிலர் அரசியல் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தி.மு.க.வினர் கடவுள் இல்லை என்று கூறி விட்டு கொள்கை மறந்துள்ளனர்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில், கோயில் புனரமைப்புக்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் கோயிலுக்கு 5000 கோடி நிதி வரும் நிலையில் ஆயிரம் கோடி நிதி ஓதுக்கீடு என்பது மக்களை ஏமாற்றும் செயல். கோயில்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். கோயில் நிலங்கள் அரசியல்வாதிகள் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணி இந்து விரோத கூட்டணியாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் தி.மு.க. கூட்டணியில் உள்ள திருமாவளவன் தொடர்ந்து இந்துக்கள் பற்றியும் அவதூறு பரப்பி வருகிறார்.
ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகியோர் இரட்டை வேடம் போடுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். தி.மு.க. .கூட்டணியில் உள்ள அதியமான் சாதிக் கலவரத்தை தூண்டும்வகையில் செயல்பட்டு வருகிறார். தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை சாத்தியமில்லை. இலவசக் கல்வியும், வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்பது இந்து முன்னணி கருத்தாகும், தமிழக முதல்வர் மீது குற்றம் சொல்ல முடியாத நிலை உள்ளது. ஆனால் தி.மு.க.மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் என்று அரசியல் கட்சியினர் கூறுவது வெற்று வாக்குறுதி. எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் இந்து விரோத கூட்டணியான தி.மு.க.வுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.