வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது என்பது சாத்தியமான ஒரு திட்டம் தான் - சிங்காநல்லூர் வேட்பாளர் டாக்டர் ஆர். மகேந்திரன்

கோவை: மக்கள் நீதி மையம் சார்பில் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் மற்றும் கட்சியின் துணை தலைவர் டாக்டர். ஆர். மகேந்திரனை ஆதரித்து, கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்கூட்டம் இன்று மாலை பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் நடந்தது.



கோவை: மக்கள் நீதி மையம் சார்பில் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் மற்றும் கட்சியின் துணை தலைவர் டாக்டர். ஆர். மகேந்திரனை ஆதரித்து, கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்கூட்டம் இன்று மாலை பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் நடந்தது.



அப்போது பேசிய, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர், டாக்டர் ஆர் மகேந்திரன்: சிங்காநல்லூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 19 வார்டுகளில் 17 வார்டுகளில் எனது பிரசாரத்தை நிறைவு செய்துள்ளேன்.இரண்டு வார்டுகள் மட்டுமே மீதம் உள்ளன. செல்லும் இடம் எல்லாம் மிகுந்த வரவேற்பை மக்கள் கொடுக்கின்றனர்.



ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு வழங்குவதை எங்கள் கட்சி நோக்கமாக கொண்டு தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளோம். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். அவரால் செய்யும் பொழுது, மற்றவர்களால் ஏன் செய்ய முடியாது. இதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது என்பது சாத்தியமான ஒரு திட்டம் தான். இதுபோன்ற மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை எங்கள் கட்சி கொண்டு உள்ளது.

இதை கருத்தில் கொண்டு மக்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். இவர் அவர் பேசினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...