பொள்ளாச்சி: பொள்ளாச்சி அண்ணாநகர் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் வரதராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அண்ணாநகர் பகுதியில்தி.மு.க. வேட்பாளர் வரதராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் டாக்டர் வரதராஜன் பொள்ளாச்சி அண்ணாநகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். இன்று 7-வதுவார்டு பகுதியில் அண்ணா நகர், இந்திரா நகர், மகாலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க. நகர துணை செயலாளர் கார்த்திக், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் குகன் மில் செந்தில் உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் டாக்டர் வரதராஜன் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரதராஜனை வரவேற்றனர்.
தி.மு.க. தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கிய டாக்டர் வரதராஜன் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். தி.மு.க. உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சியினர் உள்ளிட்ட பலர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.