கோவை: கோவை வடவள்ளி, கல்வீரம்பாளையம் பகுதியில் குடிநீர் பிரச்சினையாலும், முறையாக பராமரிக்கப்படாத கழிவுநீர் கால்வாய்களாலும் மக்கள் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

கோவை வடவள்ளி, கல்வீரம்பாளையம் பகுதிகளுக்கு உட்பட்ட வார்டு எண் 16-ல் போதிய நகர உட்கட்டமைப்பு வசதிகள் முறையாக செயல்படுத்தப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் அவதிப்படுவதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, இப்பகுதியில் குடிநீர் பிரச்சினை இருப்பதுடன் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருக்கிறது என்றனர்.
தற்போதுள்ள மாநகராட்சியின் குடிநீர் திட்டத்தின்கீழ் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர்வருவதாகவும் இதுதொடர்பாக புகார் அளித்தால் அதிகாரிகள் தெளிவான பதிலளிப்பதில்லை என்றும் தெரிவித்தனர். சூயஸ் திட்டத்தை பெருவாரியான மக்கள் விரும்பவில்லை என்றும், தங்களுக்கு தற்போதுள்ள குடிநீர் திட்டத்தின்படி முறையாக குடிநீர் வழங்கினால் போதும் என்றும் கூறினர்.
பின்னர், நெடுங்காலமாக மூடப்படாமல் இருந்த பாதாள கழிவுநீர் கால்வாய்கள் தற்போது தேர்தலை முன்னிட்டு அவசரகதியில் மூடப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் சூயஸ் குடிநீர் திட்டத்துக்காகமாநகராட்சியால் தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் அப்படியே விட்டுச் செல்லப்பட்டுள்ளது, குப்பைத் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை, குப்பைகள்சாலை எங்கும் காணப்படுவதாக குற்றம் சாட்டினர்.
சாலைகள் முறையாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதாகவும் தேர்தலை முன்னிட்டு மாநகராட்சியினர் ஆங்காங்கே தாரை கொட்டிவிட்டு சென்றுள்ளதாகவும், போதுமான தெருவிளக்குகள் இல்லாததும், அவற்றில் பல பழுதடைந்துள்ளதால் இரவு நேரங்களில் சாலையை பயன்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளது என்று தெரிவித்தனர்.
பேருந்து நிலையம் உள்பட மற்ற இடங்களில் உள்ள பொதுக் கழிப்பிடங்கள் கதவுகள் இல்லாமலும் உரிய பராமரிப்பின்றி மிக மோசமான நிலையில் உள்ளது. அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்களின் இந்தப் பிரச்சினைகள் குறித்து மாநகராட்சியிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது அரசின் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினர்.