கோவை: கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிக்கு ஓய்வுபெற்ற மத்திய படைப்பிரிவு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய உட்கோட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட நல்ல உடல்நிலையில் உள்ள 65 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்ற மத்திய படைப் பிரிவில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் (சி.ஆர்.பி.எஃப், பி.எஸ்.எஃப், சி.ஐ.எஸ்.எஃப்) சிறப்பு காவலர்களாக பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பாதுகாப்புப் பணியில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் பிரிவினை தொடர்புகொண்டு ஒப்புகை அளிக்க வேண்டும் என்றும் வாக்காளர் அடையாள அட்டையின் 2 நகல்களை சமர்ப்பிக்குமாறும் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் பிரிவை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.