கோவை மாவட்டவாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணி நிறைவு!

கோவை: கோவை மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நிறைவடைந்தன.


கோவை: கோவை மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நிறைவடைந்தன.

கோவை மாவட்டத்தில் 1,085 வாக்குப் பதிவு மையங்களில் 4,427 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் சட்டமன்ற தேர்தலுக்காக 1,370 வாக்குச் சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏற்கனவே உள்ள மையங்களில் கூடுதல் வாக்குச் சாவடிகளும், புதிய மையங்களும் தேர்வு செய்யப்பட்டு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிதாக, கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்குத் தேவையான கழிப்பறை, குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகள் அமைப்பது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தற்போது அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நிறைவடைந்தன.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,‘வாக்குச் சாவடிகளில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. வெப் கேமிராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது' என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...