கோவை: கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கூடிய திமுக வேட்பாளர் வ.ம.சண்முகசுந்தரம், இன்று மருதமலை ஆதிவாசி காலனி மக்களிடம் சென்று வாக்கு சேகரித்தார். அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, தொகுப்பு வீடுகள் மற்றும் ரேஷன் கடைகள் உடனடியாக அமைத்து தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

"உங்கள் பிரதிநிதியான பின்பு, நீங்கள், எப்போது வேண்டுமானாலும் என்னிடம் உங்கள் குறைகளை சொல்லலாம்", எனக் கூறி வாக்கு சேகரித்தார்.

பின்னர், மருதமலை பகுதியில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தனக்கு வாக்கு அளிக்கும்படி வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, ஆதிவாசி காலனி பகுதியில் பேசும்போது, தமிழகத்திலேயே முதல் முறையாக, 1986-ம் ஆண்டு நான் வடவள்ளி பேரூராட்சி தலைவராக இருந்தபோது ஆதிவாசி மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கபட்டது, என்றார்.
"தற்போது, 35 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டதால் வீடுகள் பழுதாகி உள்ளது. நான் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு ஏற்றதும், புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். காலனிப் பகுதிக்கு சிறுவாணி குடிநீர், தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். புதிதாக ரேஷன் கடை அமைத்து தருவேன்", என கூறினார்.
பிரச்சாரத்தில், கோவை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பையா ஆர். கிருஷ்ணன், திமுக நிர்வாகிகள் குப்புசாமி, துரைசாமி, ராஜா, வேலுச்சாமி, சரவண குமார், செந்தில், ராஜ்குமார், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.