கோவில்களை பக்தர்களிடம்‌ ஒப்படைக்க நடவடிக்கை எடுப்போம்‌ என்ற ஜி.கே.வாசனின்‌ அறிவிப்புக்கு சத்குரு வாழ்த்து!

கோவை: “இந்து கோவில்களை பக்தர்களிடம்‌ ஒப்படைக்க நடவடிக்கை எடுப்போம்‌” என்று உறுதி அளித்ததற்காக தமிழ்‌ மாநில காங்கிரஸ்‌ கட்சியின்‌ தலைவர்‌ ஜி.கே. வாசன்‌ அவர்களுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்‌.


கோவை: “இந்து கோவில்களை பக்தர்களிடம்‌ ஒப்படைக்க நடவடிக்கை எடுப்போம்‌” என்று உறுதி அளித்ததற்காக தமிழ்‌ மாநில காங்கரஸ்‌ கட்சியின்‌ தலைவர்‌ ஜி.கே. வாசன்‌ அவர்களுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்‌.

அதிமுக கூட்டணியில்‌ இடம்பெற்றுள்ள தமிழ்‌ மாநில காங்கிரஸ்‌ கட்சி தனது தேர்தல்‌ அறிக்கையை நேற்று (மார்ச்‌ 19) வெளியிட்டது. அந்த அறிக்கையில்‌ “தமிழகத்தில்‌ உள்ள இந்து கோவில்களை பாதுகாக்க, அதனை பக்தர்களிடமே ஒப்படைத்து, நிர்வாகம்‌ செய்ய நடவடிக்கை எடுப்போம்‌” என்று குறிப்பிட்டுள்ளது. முக்கியத்துவம்‌ வாய்ந்த இந்த முடிவிற்கு சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்‌.

இது தொடர்பாக அவர்‌ வெளியிட்டுள்ள ட்விட்டர்‌ பதிவில், “வாழ்த்துகள்‌ ஜி.கே. வாசன்‌ அவர்களே. பக்திசார்ந்த கலாச்சார வாழ்வு வாழும்‌ தமிழ்‌ மக்களிடம்‌ கோவில்களை ஒப்படைப்பேன்‌ என்று தங்களது தேர்தல்‌ அறிக்கையில்‌ உறுதியளித்துள்ளீர்கள்‌. கோவில்‌ மாநிலமான தமிழ்நாட்டின்‌ பெருமையை நாம்‌ மீட்டெடுப்போம்‌. ஆசிகள்‌ “ என்று குறிப்பிட்டுள்ளார்‌.

அழிந்து வரும்‌ தமிழக கோவில்களை பாதுகாக்க அதனை அரசு பிடியில்‌ இருந்து விடுவித்து பக்தர்களிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌ என்று சத்குரு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்‌. இதற்காக அவர்‌ தனது ட்விட்டர்‌ பக்கத்தில்‌ #கோவில்‌அடிமைநிறுத்து என்ற ஹாஸ்‌ டேக்கை பயன்படுத்தி பல்வேறு தகவல்களை தினமும்‌ பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...