கோவை: கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் முறையான ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் விதமாக வாகன சோதனை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்று ஆர்எஸ் புரம் பகுதியில் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியின் பறக்கும் படையில் புஷ்பா தேவி தலைமையிலான அணியினர் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி ரூ.9 லட்சத்து 65 ஆயிரத்து 152 எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து, பணம் கைப்பற்றப்பட்டு தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில் அரசனிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவை தெற்கு சார்நிலை கருவூலத்தில் இருப்பு வைக்க அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பேரூர் வட்டாட்சியர் முத்துக்குமார் உடனிருந்தனர்.