திமுக வெற்றிக்கு உழைப்போம் வாருங்கள் - முன்னாள். எம்.எல்.ஏ., கோவை தங்கம் பரபரப்பு அறிக்கை!

கோவை: திமுக வெற்றிக்கு உழைப்போம் வாருங்கள் என்று முன்னாள். எம்.எல்.ஏ., கோவை தங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: திமுக வெற்றிக்கு உழைப்போம் வாருங்கள் என்று முன்னாள். எம்.எல்.ஏ., கோவை தங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் த.ம.க.வில் இருந்து சமீபத்தில் விலகிய மாநிலத் துணைத் தலைவருமான கோவை தங்கம் வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள ஜி.கே மூப்பனாரின் உண்மை விசுவாசிகள் நண்பர்கள் மாவட்ட மற்றும் மாநில அளவில் உள்ள தீவிர தொண்டர்கள் இன்றைய நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஊழல் ஆட்சியை அகற்றிட தாழ்ந்து கிடக்கின்ற தமிழகத்தை உயர்த்திட தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியை மலரச் செய்ய கடுமையாக உழைக்க வேண்டும்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கு நம்முடைய முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கடந்த 2001ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் தொடர்ந்து வால்பாறை தொகுதிக்கு நான் செய்த சேவைகளை மனதில் கொண்டு வால்பாறை பகுதி மக்கள் இத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேண்டும் என என்னை வற்புறுத்தினர்.

ஆனால், திமுக தலைவர் மு. க ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் போட்டியிடவில்லை. மு.க ஸ்டாலின் வால்பாறை பகுதி வளர்ச்சிக்காக தொடர்ந்து உதவியுள்ளார். அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அதனால் போட்டியிடவில்லை. வால்பாறை தொகுதி மக்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். தேர்தலில் போட்டியிட்டாலும் வால்பாறை தொகுதி மக்களுக்காக என்றும் உழைப்பேன் இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...