3வது அணியும் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்: கிணத்துக்கடவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பேச்சு

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர், சிவாவை ஆதரித்து கட்சித் தலைவர் கமலஹாசன் இன்று கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு பரப்புரையில் ஈடுபட்டார்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர், சிவாவை ஆதரித்து கட்சித் தலைவர் கமலஹாசன் இன்று கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு பரப்புரையில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய, கமலஹாசன்.. கிணத்துக்கடவு தொகுதியில் நன்கு அறிமுகமான சிவா பல நாட்களாக மக்களுக்கு நல்லது செய்து வருகிறார், மேலும் மக்களுக்கு நல்லது செய்ய இன்னுமொரு அதிகாரம் வேண்டும், என்பதற்காகவே மக்கள் நீதி மய்யம் சார்பாக சிவாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

தமிழகத்தில் 50 வருடங்களாக செய்த தப்பை திருத்தவே மக்கள் நீதி மய்யம் இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் களம் காண்கிறது. சில கட்சிகள் மக்களுக்கான நல்ல திட்டங்களை செய்ய முடியாததை மறைக்கவே இலவசத் திட்டங்களை அறிவித்து வருகின்றனர், என்று விமர்சித்தார்.



மக்கள் நீதி மய்யம் 6 மாதத்தில் அழிந்துவிடும் என்றும் சொன்னவர் மத்தியில் தற்போது மூன்று வருடங்களாக பயணித்து வருவதைக் கண்டு சிலருக்கு கை, கால்கள் நடுங்கி வருவதாகவும், தமிழகத்தில் 3வது அணியும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையில் மக்கள் நீதி மையம் போட்டியிடுகிறது என்றார் கமல்.



கமலஹாசன் ஒரு கருவி அதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்தை சீரமைக்க நான் மட்டும் போதாது, மக்களும் கைகோர்க்க வேண்டும் என்றும் பரப்புரையின் போது கமலஹாசன் பேசினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...