மக்கள் எளிதாக அணுகும் எம்.எல்.ஏ.வை எதிர்பார்க்கிறார்கள்; கமல், வானதி சீனிவாசனை மக்களால் பார்க்க முடியாது: கோவை தெற்கு தொகுதி காங். வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் பேச்சு!

கோவை: மக்கள் எளிதாக அணுகும் எம்.எல்.ஏ.வையே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் கமல், வானதி சீனிவாசன் போன்றவர்களை மக்களால் எளிதில் பார்க்கக்கூட முடியாது என்று கோவை தெற்கு தொகுதி காங். வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் கூறினார்.


கோவை: மக்கள் எளிதாக அணுகும் எம்.எல்.ஏ.வையே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் கமல், வானதி சீனிவாசன் போன்றவர்களை மக்களால் எளிதில் பார்க்கக்கூட முடியாது என்று கோவை தெற்கு தொகுதி காங். வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் கூறினார்.



கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தொகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகையை முடித்துக்கொண்டு வந்த இஸ்லாமிய சமூகத்தினரிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் பேசியதாவது:-

கமல்ஹாசனையும், பாரதிய ஜனதா கட்சியின் வானதி சீனிவாசனையும் வலிமையான வேட்பாளர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. கமல்ஹாசன் நட்சத்திர நடிகர் என்பதாலும், வானதி சீனிவாசன் தேசிய அளவில் பொறுப்பில் இருப்பதாலும் அப்படி ஒரு பிம்பம் இருக்கிறது, இவர்கள் இருவரும் கையாள்வது சமூக ஊடகங்களைத்தான். இவர்களுக்கும் கோவை தெற்கு தொகுதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

தேர்தலுக்குப் பிறகு தேசிய பொறுப்பிலிருக்கும் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதிக்கு அவரது அலுவலகத்தை மாற்றிக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது. அதேபோல் தொழில் வேறு அரசியல் வேறு என்று கூறியுள்ள மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தனது தொழிலான சினிமாவை கவனிக்கச் சென்று விடுவார். அவரை எப்படி எளிய மக்கள் அணுகி தங்கள் குறைகளைக் கூற முடியும்.

கோவை தெற்கு தொகுதியைப் பார்ப்பதற்கு வேண்டுமானால் பொருளாதாரத்தில் உயர்ந்த சமூகத்தினர் அதிகம் இருக்கும் பகுதி போல் காட்சி அளிக்கலாம். ஆனால் பெரும்பான்மையான மக்கள் நடுத்தர உழைக்கும் வர்க்கத்தினர் ஆவர். மக்கள் எளிய முறையில் அணுகக்கூடிய, மக்கள் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு செயல்படும் சட்டமன்ற உறுப்பினரைத்தான் எதிர்பார்க்கிறார்கள். பல ஆண்டுகளாக களத்தில் மக்களுடன் படித்தவன் என்ற முறையில் அதற்கான தகுதி எனக்கு உள்ளது என்று நம்புகிறேன்.

கோவை தெற்கு தொகுதியைப் பொறுத்தவரை முக்கிய பிரச்சினைகளாக இருப்பது நகர உட்கட்டமைப்பு பிரச்சினைகளாகும். பாதாளச் சாக்கடை, குடிநீர், முறையற்ற சாலைகள் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு பிரச்சனைகள் உள்ளது. கோவையில் பிரதான தொழிலாக இருந்த நகைத் தொழில், அரசின் போதிய கவனமில்லாமல் இன்று நலிவடைந்து போயிருக்கிறது. பலர் தொழிலில் இருந்து விலகிச் சென்று விட்டார்கள். பல தொழிலாளர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் சட்டமன்ற உறுப்பினரானால் அவர்களுக்கான நலத்திட்டங்கள் அறிவிக்கப்படும்.

அரசு கலைக் கல்லூரி மற்றும் பள்ளிகளை மேம்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள்தான் வைத்திருப்பதாகவும் அவற்றின் தரத்தை தனியார் கல்வி நிறுவனங்களின் தரத்துக்கு உயர்த்துவேன். நான் வெற்றி பெற்றால் வேலைக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் மாநகராட்சி காவல்துறை இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவது, இரவுநேரப்பணியில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவது, பொது வெளியில் அதிகரித்துள்ள நகை திருட்டை தடுக்கும்விதமாக பொது இடங்களில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்க ஏற்பாடுகள் செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...